2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 3 ஆம் திகதி வரை இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்

நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை இந்த ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருமாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!