வவுனியா- காங்கேசன்துறை இடையே இன்று முதல் ரயில் சேவை!

காங்கேசன்துறை – வவுனியா இடையே இன்று தொடக்கம் சாதாரண வகுப்பு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் ரயில் வவுனியாவை காலை 8.07 மணிக்குச் சென்றடையும்.

அத்துடன், இன்று மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி அந்த ரயில் பயணத்தை ஆரம்பிக்கும் என்று யாழ்ப்பாண ரயில் நிலைய பிரதான அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு 60 ரூபாய் கட்டணமும் மாங்குளத்துக்கு 120 ரூபாய் கட்டணமும் வவுனியாவுக்கு 160 ரூபாய் கட்டணமும் அறவிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

தினமும் காலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்தும் காலை 5.45 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய ரயில் நிலையத்திலிருந்தும் நாவற்குழி, கொடிகாமம் நிலையங்களில் தரித்து கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

காலை 6.53 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து காலை 7.22 மணிக்கு மாங்குளத்திலிருந்தும் புறப்படும் ரயில் காலை 8.07 மணிக்கு வவுனியா ரயில் நிலையத்தைச் சென்றடையும். தினமும் மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி ரயில் பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் ரி.பிரதீபன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!