18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை தொடர்பில் இரண்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை தொடர்பில் இரண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் நிறை தெளிவாக கிலோகிராம்களில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் நிறை கிலோகிராம்களில் குறிப்பிடப்பட்டிருக்காத பட்சத்தில் அவற்றை, உற்பத்தி செய்தல் , மற்றும் களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக , நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

மேலும், 9 தசம் 6 கிலோ கிராம் என குறிப்பிடப்படும் 18 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் குறைந்தபட்ச சில்றை விற்பனை விலை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்காக ஆயிரத்து 150 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த எரிவாயு சிலிண்டரின் அதிக பட்ச சில்லறை விலை யாழ்ப்பாணம் மாவட்டத்திற்காக ஆயிரத்து 259 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!