பிரித்தானியாவிற்கு வரவிருக்கும் பேராபத்து!

பிரித்தானியாவில் மிக விரைவில் பொருளாதாரமும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் மிக மோசமான நிலை ஏற்பட இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெப்ப அலை காரணமாக பிரித்தானியா பேராபத்தை சந்திக்க இருப்பதாகவும், இன்னும் 10 ஆண்டுகளில் அது நடந்தேறும் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளாவிய வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில், பிரித்தானியாவின் சில பகுதிகள் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக வெப்பநிலையை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும்,

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மரணமடையும் மிக மோசமான நிலை உருவாகும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை நெருக்கடி பிரித்தானியாவை தாக்கும் சூழலில் வெப்பநிலை 40கும் மேல் பதிவாகலாம் எனவும், இதனால் நீர்வழங்கல், பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து மொத்தமாக பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமீபத்திய வெப்பமான வானிலை வரவிருக்கும் ஆண்டுகளில் மிகவும் கடுமையான வெப்ப அலை வீசக் கூடும் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார் ஆய்வாளர் Chloe Brimicombe.

மேலும், அடுத்த பத்து ஆண்டுகளில் தெற்கு இங்கிலாந்தில் முதல்முறையாக 40 ° C அளவுக்கு வெப்பம் பதிவாகும் நிலை ஏற்படும் என்றார் அவர்.

மட்டுமின்றி, நமது ரயில் சேவைகள் அவ்வாறான வெப்ப அலை நாட்களில் செயல்படும் சூழலில் உருவாக்கப்படவில்லை என்றும், இதனால் மொத்த ரயில் சேவையும் ஸ்தம்பிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெப்ப அலை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு உச்சத்தில் செல்லும் எனவும், இதனால் உற்பத்தித்திறன் சரிவடையும், அது நம் கால்நடைகளையும் பயிர்களையும் பாதிக்கும் என Chloe Brimicombe சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவை பொறுத்தமட்டில் 2019 ஜூலை மாதம் தான் 38.7C என அதிக வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!