நெடுந்தீவில் தடுப்பூசி ஏற்றிய தாதிக்கு கொரோனா! – 46 குழந்தைகளின் நிலை?

நெடுந்தீவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கிய தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி ஏற்றிய 46 குழந்தைகள் மற்றும் குழந்தைகளுடன் சமூகமளித்த தாய்மாருக்கு கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த குழந்தைகள் தாய்மார் மற்றும் மருத்துவ தாதியுடன் தொடர்புபட்டவர்களுக்கு அவசரமாக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த மருத்துவத்தாதி வேலணையிலிருந்து நெடுந்தீவு மருத்துவமனைக்குச் சென்று பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!