நடுக்கடலில் கவிழ்ந்த படகு: 57 பேர் பலி – எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்?

லிபிய கடற்கரையில் கும்ஸ் அருகே படகு கவிழ்ந்ததில் குறைந்தது 57 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐ.நா-வின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது. இந்த விபத்துடன் மத்தியதரைக் கடலில் 1,100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று IOM தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை, ஆனால் நைஜீரியா, கானா மற்றும் காம்பியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட புலம்பெயர்ந்தவர்கள் பலர் உயிர் தப்பியுள்ளதாக IOM செய்தித் தொடர்பாளர் சஃபா மெஸ்லி தெரிவித்தார்.

உயிர்தப்பியவர்கள் மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். உயிர்தப்பியவர்கள் அளித்த தகவலின் படி, நீரில் மூழ்கி இறந்தவர்களில் குறைந்தது 20 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவர்.

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் விபத்துக்குள்ளான படகில் பயணித்துள்ளனர், அவர்கள் கும்ஸிலிருந்து புறப்பட்டு ஐரோப்பியாவை நோக்கி பயணித்ததாக மெஸ்லி கூறினார்.

ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரித்த போதிலும், அதானல் நெருக்கடி ஏற்படவில்லை. ஐரோப்பாவுக்கு வருகை தரும் புலம்பெயர்ந்தோர் இடம்பெயர்வு மேலாண்மை மூலம் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன என்று மெஸ்லி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!