இலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை

இலங்கையில் மீட்கப்பட்ட உலகின் மிக பெரிய இரத்தினக்கல்லின் பெறுமதி தொடர்பில் புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் கிடைத்த குறித்த இரத்தினக்கலின் பெறுமதி தேசிய இரத்தினக்கல் அதிகார சபை கூறும் அளவிற்கு பெறுமதி வாய்ந்தது கிடையாது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை இரத்தினக்கல் துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த இரத்தினக்கல்லின் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் என நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இரத்தினக்கல் அதிகார சபையின் தலைவர் திலக்க வீரசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, தேசிய இரத்தினக்கல் அதிகார சபை கூறும் அளவிற்கு குறித்த இரத்தினக்கல் பெறுமதி அற்றது என அந்த துறை சார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!