உக்காத லஞ்சீட் வகைகளுக்கு தடை!

பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத லஞ்சீட் வகைகளை விற்பனை செய்வதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான தடை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கையில் அமுலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்தார். உணவு வகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லஞ்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!