தினமும் 150 பேர் பலியாகும் நிலை ஏற்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாதமொன்றுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 4000 – 4500 ஆக அதிகரிக்கும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எண்ணிக்கை போரின் போது ஒரு நாளைக்கு உயிரிப்போரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம் என்று சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

“ஒவ்வொரு நாளும் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 க்கும் அதிகமாக உள்ளது. ஒரு மாதத்திற்கு 4,000 முதல் 4,500 இறப்புகளை நாம் எதிர்பார்க்கலாம். போரின் போது இவ்வளவு பேர் இறக்கவில்லை.

இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” எதிர்காலத்தில் இது நிகழும் ஆபத்து இருப்பதால் மக்கள் புரிந்துகொண்டு செயல்படுவது மிகவும் முக்கியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!