பிரான்சில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பெண் செய்த செயல்: கொடுக்கப்பட்ட அதிரடி தண்டனை!

பிரான்சில் போலியான சுகாதார பாஸ் வழங்கிய பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பிரான்சில் உருமாறிய பீட்டா வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு சமீபநாட்களாக கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பொது போக்குவரத்து, அதாவது இரயில்களில் நீண்ட தூர பயணம் செய்ய வேண்டும் என்றால், சுகாதார பாஸ் முக்கியம். அப்படி சுகாதார பாஸ் இல்லையென்றால் அவர்கள் இரயிலில் ஏறுவதற்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், Seine-Saint-Denis மாவட்டத்தில் போலியான சுகாதார பாஸ் வழங்கிய பெண் ஒருவருக்கு ஓராண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர் சுமார் 200 பேருக்கு இந்த சுகாதார பாஸ் அட்டைகளை வழங்கியுள்ளார்.

கடந்தவாரத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இவர், ஜூலை 27 ஆம் திகதி பொபினி நிர்வாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்டுத்தப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஸ்னாப்சாட் சமூகவலைத்தளமூலமாக இவர் தனது வாடிக்கையாளர்களை தேடிக்கொண்டதாகவும் ஒவ்வொரு சுகாதார பாஸிற்கு 200 யூரோவில் இருந்து 400 யூரோக்கள் வரை அவர் பெற்றதும் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!