டயகம சிறுமியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப் பெண்ணாக தொழில் செய்துவந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜூட்குமார் ஹிஷாலினி எனும் சிறுமி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீக்காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தார்

இதையடுத்து சிறுமியின் உடல் டயகம மேற்கு தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு − புதுக்கடை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, நுவரெலியா நீதவான் முன்னிலையில், சிறுமியின் உடலை தோண்டி எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில், கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட மூன்று சட்ட வைத்தியர்கள் உட்பட நீதிமன்ற பதிவாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழு முன்னிலையில், சிறுமியின் உடல் நேற்று தோண்டி எடுக்க்பட்டது.

இந்தநிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக விசேட பொலிஸ் பாதுகாப்புடன் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், சிறுமியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த பிரேத பரிசோதனை மூவர் அடங்கிய விசேட வைத்திய அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!