கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் பின்வாங்குகிறது அரசாங்கம்!

கொத்தலாவல ​தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்தை, வௌ்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்த அரசாங்கம், அதனை அன்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் விடுவதற்கு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அந்தச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில், ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தில், இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் ​அதேவேளை, சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு பரவலாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!