டெனீஸ்வரன் வழக்கு – நீதிமன்றத் தீர்ப்பை கேள்விக்குட்படுத்துகிறார் முதலமைச்சர்!

மாகாண சபை அமைச்சர் ஒருவரை நியமிப்பது மற்றும் பதவி நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உரியதா அல்லது ஆளுநருக்குரியதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கே இருப்பதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பு பற்றிய அர்த்த விளம்பலை வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அன்றி உச்சநீதிமன்றத்துக்கே உள்ளது. நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கும் நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடைக்கட்டளையை பிறப்பிப்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் விளக்கமளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!