‘நிலைமை மோசமாக உள்ளது’ – உலக நாடுகளை எச்சரித்த ஐ.நா!

புவி வெப்பமடைதலின் வேகம் எதிர்பார்த்தைவிட அதிகமாக இருப்பதாக ஐ.நா அமைப்பின் குழ ஒன்று உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு (Intergovernmental Panel on Climate Change-IPCC ) என்பது பல்வேறு அறிவியலாளர்களை கொண்ட ஒரு குழுவாகும்.

இந்த ஐ.பி.சி.சி. அமைப்பானது 1988-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உலக வானிலை அமைப்பால் இணைந்து உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் என்பது உலக நாடுகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதற்கான அறிவியல் பூர்வ தகவல்களை அளிப்பதாகும்.

எனவே அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் 2050ல் தான் புவி வெப்பம் 1.5 முதல் 2 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட வேகமாக புவி வெப்பம் அதிகரித்து வருவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ பி சி சி இதுவரை 5 மதிப்பீட்டு அறிக்கைகளை (Assesment Report) தயாரித்து வெளியிட்டுள்ளது. முதல் மதிப்பீட்டு அறிக்கை ( FAR) 1990-ஆம் ஆண்டு உலக வெப்பமயமாதலின் ஆதாரங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்தும் வெளியிட்டது.

இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை (SAR-Second Assesment Report) 1995-ஆம் ஆண்டு உலக அளவில் காலநிலை மாற்றத்திற்கு மனித செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம் என்பது தொடர்பானது.

மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை (TAR) 2001-ஆம் ஆண்டு கடந்த 50 ஆண்டுகளில் உலகம் சந்தித்த வெப்பநிலை உயர்வுக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம் என்பதற்கான புதிய மற்றும் வலுவான ஆதாரங்களை முன்வைத்தது.

நான்காவது மதிப்பீட்டு அறிக்கை (AR4) 200-ஆம் ஆண்டு உலகளவில் சராசரி காற்று மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் உயருதல் போன்றவற்றை கண்காணித்ததின் அடிப்படையில் உலக வெப்பமயமாதல் என்பது சந்ததேகத்திற்கு இடமின்றி தெளிவாகியதாக கூறப்பட்டிருந்தது.

ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை (AR5) 2014-ஆம் ஆண்டு வெஅனைத்து கண்டங்கள் மற்றும் கடல்களில் காலநிலை அமைப்பில் மனிதச் செயல்பாடுகளின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 95% மனிதர்கள் மட்டுமே உலக வெப்பமயமாதலுக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

புவி வெப்பம் அடைதல் வேகம் குறைந்தால் நாம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இயலும்.

ஆனால் தற்போது 20 ஆண்டுகளில் அதன் தாக்கம் அதிகரித்தால் உலகம் பல்வேறு இயற்கை பேரிடரை சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி உலகில் உள்ள 60 சதவிகிதம் உயிரினங்கள் வெப்பம் தாக்கம் காரணமாக மரணிக்கும் அபாயம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுகிறது காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!