முக்கிய அமைச்சு பதவிகளில் மாற்றம்! – ஜனாதிபதி நடவடிக்கை

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியுறவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களில் மாற்றங்களைச் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுற்றுலா, மின்சாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களும் மாற்றங்களுக்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். தற்போது அந்த பதவியை வகிக்கும் தினேஷ் குணவர்தன உயர் கல்வி அமைச்சகத்தை பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண புதிய சுகாதார அமைச்சராகவும், அவரது தற்போதைய இலாகா கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரம்புக்வெல்லவின் ஊடக அமைச்சு மின்துறை அமைச்சராக இருக்கும் டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்கப்பட உள்ளது.

மின்சக்தி அமைச்சு தற்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடமும், சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!