சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கு அனுமதி!

Gas cylinders
லாப் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய 363 ரூபாவினால் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் 12 தசம் 5 கிலோகிராம் புதிய சிலிண்டரின் விலை 1 ஆயிரத்து 856 ரூபாவாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லாப் சமையல் எரிவாயுவின் 5 கிலோ சிறிய அளவு சிலிண்டரின் புதிய விலை 743 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!