முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்கள் பிடியாணையின்றி கைது

பாதுகாப்பு முகக்கவசம்அணியாதோர் தொடர்பில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

இதற்கமையபொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்கள் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள்என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன்,இது தொடர்பில் அனைத்து பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும்அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும்,முகக்கவசம் சரியான முறையில் அணியாமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எனவே,வீட்டிலிருந்து வெளியேறும் பொழுது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வெளியேறுமாறு பொலிஸ்ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!