கொழும்பில் வாழ்வோருக்கும், கொழும்பிற்கு வருவோருக்கும் மாநகர மேயர் விடுத்துள்ள எச்சரிக்கை

உங்கள் செயற்பாடுகளில் மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கொழும்பில் வசிப்பவர்களுக்கும், கொழும்பிற்கு வருவோருக்கும் அவசர அறிவுறுத்தலொன்றை கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் அவர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கையில் மேலும்,

முன்னொருபோதும் இல்லாததும் மிகவும் சவாலானதுமான அனுபவத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம். விடயங்கள் மோசமடைய நாம் அனுமதிக்க முடியாது.

கோவிட் – 19 தொற்றுநோய் பரவுவதற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை ஒரு தீர்க்கமான கட்டத்தில் உள்ளது.

தொற்று நோய் எம்மைத் தாக்கியதில் இருந்து கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையும், தொடர்புடைய மரணங்களும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன என்பது இரகசியமல்ல.

உங்கள் செயற்பாடுகளில் மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் மீதானதும் அதேசமயம் மற்றவர்கள் மீதானதுமான உங்களின் பொறுப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அடுத்த சில வாரங்களுக்கு கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டல்களையும் அவர் வழங்கியுள்ளார்.

அதன்படி,

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது நன்கு பொருந்தும் முகக்கவசம் அல்லது இரட்டை முகக்கவசத்தை அணியுங்கள்.

அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொள்வதுடன் சமூக இடைவெளியை எப்போதும் பேணிக் கடைப்பிடியுங்கள்.
அவசியமாக தேவைப்படாவிடில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.

உங்களுக்குத் தேவையான சேவை இணையவழியில் கிடைக்கிறதா என்பதை பரிசீலிக்கவும். உதாரணமாக கொழும்பு மாநகரசபை தொடர்பான பல சேவைகள் இணைய வழியில் கிடைக்கின்றன.

நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது வெளியில் செலவிடும் நேரத்தை குறைக்கவும்.

அவசியமாக தேவைப்படாவிட்டல் உங்கள் வீட்டிற்கு வருகை தருபவர்களை அனுமதிக்காதீர்கள்.

அத்தியாவசியப் பணிகளைத் தொடர அரசாங்கம் சில செயற்பாடுகளுக்கு அனுமதிக்கிறது. முற்றிலும் தேவையானதைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

அத்தியாவசியப பணிகளைத் தொடர அரசாங்கம் சில செயற்பாடுகளுக்கு அனுமதிக்கிறது. முற்றிலும் தேவையானதை தவிர வேறு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான வாய்ப்பாக அதனை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

உணவங்கள், ஹோட்டல்கள், கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உட்பட பல வர்த்தக நிறுவனங்கள் சன நெரிசல்கள், வெப்பநிலை சோதனைகள் மற்றும் தொடர்பு தகவல் சேகரிப்பு குறித்த சுகாதார வழிபாட்டுதல்களை வெளிபப்டையாக புறக்கணித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. இது வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை பொறுப்பற்ற முறையில் அலட்சியப்படுத்துவதுடன் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும்.
வேலைக்கு நேரடியாக சமூகமளிக்க வேண்டிய அவசியம் இல்லாவிடின் பணியாளர்களை வீடுகளில் இருந்து வேலை செய்யுமாறு அவர்களை வர்த்தகத்துறை ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய சந்தர்ப்பங்களில் தனிநபருக்கான போக்குவரத்து முறையை அவர்கள் வழங்க முயற்சிக்க வேண்டும். மேலும் ஊழியர்கள் தங்கள் தொழிலை இழந்து விடுவது பற்றிய கவலைகள் காரணமாக தேவையற்ற ஆபத்துக்களை எடுத்துக் கொள்ள கூடும். தொழில் தொடர்பாக அத்தகைய சூழலை உருவாக்காதது தொழில் வழங்குநரின் கடமையாகும்.

சுகாதார வழியாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு மீண்டும் ஒருமுறை அனைத்து தனியாட்களையும், வர்த்தக ஸ்தாபனங்களையும் கேட்டுக் கொள்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!