சுற்றுலா பயணிகள் மூலம் பரவிய கோவிட் தொற்று!குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர்

சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டைத் திறப்பதன் மூலம் கோவிட் தொற்று நோய் பரவியது என்ற குற்றச்சாட்டுகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மறுத்துள்ளார்.

இந்த நிலையில், சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மூன்று மில்லியன் மக்களுக்கு வசதியாகவே நாடு திறக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் உட்பட சில தரப்பினர் சுற்றுலாப் பயணிகளுக்காக குறிப்பாக யுக்ரேனியர்களுக்காக நாடு திறக்கப்பட்டதால் கோவிட் தொற்றுநோய் பரவியதாக மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுகாதார அமைச்சகத்துடன் நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்காக ‘உயிர் குமிழி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், இது சுற்றுலா அமைச்சகத்தின் தன்னிச்சையான முடிவு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே குறுகிய அரசியல் அறிக்கைகளால், எதிர்க்கட்சியினர் மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!