ரிஷாட் பதியூதீனின் மைத்துனர் பிணையில் விடுவிப்பு

பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மைத்துனர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

2016 ஆம் ஆண்டு பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஜூலை மாதம் 23 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரரான 44 வயதுடைய குறித்த சந்தேக நபரின் பிணைமனு கோரிக்கை கடந்த 9 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலை படுத்தப்பட்டதையடுத்து 5 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவித்து நீதவான் புத்திக ஶ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்

அத்துடன் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் கடவுச்சீட்டை நீதமன்றில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை டயகம சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மனைவியின் தந்தை மற்றும் இடைத்தரகர் ஆகியோர் எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!