ஆப்கானிஸ்தானில் உயிரை காப்பாற்றிக்கொள்ள மூவர் செய்த செயல்: பின்னர் நடந்த விபரீதம்!

ஆப்கானில் பறக்கும் விமானத்தில் இருந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். ஆப்கன் அதிபர் மற்றும் துணை அதிபர் திடீரென நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் காபூல் உள்பட அனைத்து நகரங்களையும் பிடித்த தாலிபான்கள் தற்போது தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். தாலிபான்கள் ஆட்சியில் மிகவும் பொதுமக்கள் கொடூரமாக நடந்தப்படுவார்கள் என்பதால் அந்நாட்டில் இருந்து மக்கள் வெளியேறுகின்றனர். இதனால் ஆப்கான் விமான நிலையத்தில் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தின் டயர் பகுதியில் அமர்ந்து சென்ற 3 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். காபூல் விமான நிலையத்தில் நிலைமை மோசமாகவே அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா மட்டும் தமது நாட்டு மக்களை மீட்பதற்காக விமானங்களை தரை இறக்கியது. அச்சமயம் காபூல் விமானத்தில் இருந்து ஏராளமானோர் அமெரிக்கா விமானத்தை முற்றுகையிட்டு ஏற முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் டயர் பகுதியில் ஏறிய பலர் விமானம் மேலே எழும்பிய போது கீழே விழுந்து காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருந்த அமெரிக்கர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க போர் விமானம் காபூலில் இருந்து புறப்பட்டது. விமானத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு ஓடுபாதையில் சென்ற விமானத்தில் ஏற ஏராளமான ஆப்கானிஸ்தவர்கள் முயற்சி செய்தனர். மக்கள் கூட்டத்தை பொருட்படுத்தாமல் அமெரிக்க விமானத்தை அமெரிக்க விமானி ஓட்டி சென்றார். விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததால் டயர் மீது அமர்ந்து சென்ற மூவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்கா விமானம் ஒன்றில் தொங்கியபடி பயணித்த 3 பேர் நடுவானில் இருந்து அடுத்தடுத்து கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!