பொலிஸ் காவலில் இறந்த இளைஞன் – கொழும்பில் உடற்கூற்றுப் பரிசோதனை

மட்டக்களப்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட விதுஷசன் என்ற இளைஞன் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதி பதி ஏ,சி ரிஷ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, புதைக்கப்பட்ட விதுஷசனின் சடலத்தை மீண்டும் 21ம் திகதி திங்கட்கிழமை தோண்டி எடுத்து இலங்கையிலேயே இத் துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின்உபேராசிரியர் முன்னிலையில் மீளவும் பிண பரிசோதனை மேற்கொள்ள மாண்புமிகு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த வகையில் தோண்டி எடுக்க பட்ட விதுஷனின் சடலம் அனுராதபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் உடல் கூற்று பரிசோதனைக்காக கொழும்புக்கு மாற்றபட்டுள்ளதாக அவருடைய தகப்பனார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம் 3ம் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப் பட்ட நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!