வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி விடுத்துள்ள வேண்டுக்கோள்

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம் இராஜாங்க அமைச்சரும், விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடனான உரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஒட்சிசன் தட்டுப்பாடும் நிலவுகிறது. இவற்றை பெற்றுக்கொடுக்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!