அரசுடனான பேச்சு வார்த்தை பொறுப்புக்கூறலைப் பாதிக்காது! எம்.ஏ.சுமந்திரன்

நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என்பதற்காக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை.

உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கை மிகவும் காட்டமாகவே அமையும். அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில் எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் சர்வதேசத்தினை சமாளிக்க முடியாது என யாழ். . நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும், அரசியல் தீர்வு விடயத்தில் நாங்களும் அரசாங்கமுமே பேசியாக வேண்டும். அதற்கான நடுவராக அமெரிக்க செயற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் குறித்த செவ்வியில்,

கேள்வி:-நீங்கள் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?

பதில்:- கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் தற்போது கையாளும் சட்டமானது சுகாதார வழிமுறைகள்சார்ந்த ஒன்றல்ல. சுகாதார சட்டங்களைக் கொண்டே இதனை கையாள வேண்டும். ஆனால் சுகாதார சட்டங்களை புதிப்பிப்பதற்கு அரசாங்கம் அக்கறைகாட்டவில்லை.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் தனிநபர் சட்டமூலமொன்றை சபையில் முன்வைத்தேன். இந்த ஆண்டு ஏப்ரல் வரையிலும் எனது பிரேரணை குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. ஏப்ரல்மாதத்தின் பின்னரே சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்து வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுபாராளுமன்றத்திலும் சமர்பிக்கப்பட்டது.

தற்போது அரசாங்கம் கொண்டு வந்துள்ளசட்டமானது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே, என்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையானது,பொது சுகாதார அவசரகால நிலையொன்று ஏற்பட்டால்என்ன செய்ய வேண்டும் என்பதை சார்ந்ததாகும். இது கொரோனா வைரஸ் காரணிகளுக்கு மட்டுமல்லஎதிர்காலத்தில் வேறேதும் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் கையாளக்கூடிய வகையில் இருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!