எழுமாறான ANTIGEN பரிசோதனைகளில் பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டின் சில இடங்களில் முன்னெடுக்கப்படும் எழுமாறான என்டிஜன் பரிசோதனைகளில் பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில், களுத்துறை பகுதியில் 50 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாறான என்டிஜன் பரிசோதனைகளில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, யட்டியாந்தோட்டை பகுதியில் 105 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாறான என்டிஜன் பரிசோதனைகளில் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பண்டாரவளை பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 40 வீதமாக காணப்படுவதாக பொதுசுகாதார பரிசோதகர் ரஞ்சித் திஸானாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொற்றுக்குள்ளாகும் நபர்கள் தொடர்பில், உடனடியாக தமது பிரதேச பொதுசுகாதார பரிசோதகரை தொடர்ப்பு கொண்டு அறிவிக்குமாறு பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!