எனக்கு எதிரான பிரச்சாரத்திற்கு வெளிநாடுகளை பயன்படுத்துகின்றனர்- மகிந்த

எனக்கு எதிராக சேற்றைவாரியிறைக்கும் பிரச்சாரம் ஆரம்பமாகிவிட்டது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்காக வெளிநாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சேற்றைவாரியிறைக்கும் பிரச்சாரம் ஆரம்பமாகிவிட்டது தற்போது எல்லாவற்றிற்கும் என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் விஜயகலா விவகாரத்திற்கு யாரோ ஒருவர் என்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நியுயோர்க் டைம்சில் வெளியான குற்றச்சாட்டுகளிற்காக அந்த செய்தித்தாளிற்கு எதிராக ஏன் சட்டநடவடிக்கை எடுக்கவில்லை என சிலர் கேள்வி எழுப்புகின்றனர் என தெரிவித்துள்ள அமெரிக்காமகிந்த ராஜபக்ச வில் எனக்கு வாக்குரிமை இல்லை,நான் அமெரிக்காவில் தேர்தலில் போட்டியிடப்போவதுமில்லை எனகுறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கட்டுரையை திரிபுபடுத்தியதற்காக அமைப்பொன்றிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன,இதனை ஊடகங்களை ஒடுக்குவதற்காக நான் செய்யவில்லை, ஊடகங்களை திருத்துவதற்காகவே செய்கின்றேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது சகோதரரை அழைத்தமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு நன்றி தெரிவித்துள்ள மகிந்தராஜபக்ச அழைப்பை ஏற்றமைக்காக கோத்தபாய ராஜபக்சவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு வந்திருக்காவிட்டால் எங்களிற்குள் மோதல் என தெரிவித்திருப்பார்கள் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!