பிரித்தானியாவில் தாய் மற்றும் குழந்தையை கொன்று புதைத்த வழக்கில் அதிரடி திருப்பம்!

பிரித்தானியாவில் 25 வயது தாய் மற்றும் அவரது 2 வயது குழந்தையை சமையல் அறையில் கொன்று புதைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட நபர், கூடுதலாக 7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டபட்டுள்ளார். ஸ்காட்லாந்தின் Dundee-யில் உள்ள ட்ரூன் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில், 25 வயதான பென்னிலின் பர்க் (Bennylyn Burke) மற்றும் அவரது 2 வயது குழந்தை ஜெலிகாவை (Jellica) கொன்று, அதே வீட்டில் சமையல் அறையில் புதைத்த குற்றத்திற்காக, ஆண்ட்ரூ இன்னெஸ் (Andrew Innes) எனும் 51 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலைகள் இந்த ஆண்டு பிப்ரவரி 20 முதல் மார்ச் 5-ஆம் திகதிக்குள் நடந்ததாக கூறப்படுகிறது.

இன்னெஸ் பென்னிலின் உடலில் கத்தியால் குத்தியதாகவும், தலையில் சுத்தியால் மற்றும் பிளேடின் கைப்பிடியால் பலமுறை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிகையில் இன்னெஸ் ஜெலிகாவை மூச்சு திணறடிக்கச்செய்து கொன்றதாகவும் குற்றம் சாட்டபட்டுள்ளது. மேலும், பென்னிலின் உடல் சமையல் அறையின் தரையின் கீழ் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும், அதேசமயம் குழந்தை ஜெலிகாவின் உடலை மறைத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


இந்த வழக்கு தொடர்பாக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணை நடந்தது. அப்போது, மேலும் வழக்கில் ஒரு திருப்பமாக , சில திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் இன்னெஸ் மீது சாட்டப்பட்டது.

அதாவது, பென்னிலினை கொலை செய்த பிறகு, பிப்ரவரி 28-ஆம் திகதி குழந்தை ஜெலிகாவையும், மற்றோரு 7 வயது பெண் குழந்தையையும் லானார்க்ஷயரில் உள்ள கம்பெர்னால்டில் உள்ள ஓல்ட் இன்ஸ் கஃபேக்கு இன்னெஸ் கடத்திச் சென்றதாகவும், அங்கு வைத்து அந்த 7 வயது சிறுமையை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், சாட்சிகளின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில், இன்னெஸ் இந்த குற்றச்சட்டுகளை ஏற்கவில்லை, மேலும் அவர் தரப்பில் வாதாட வழக்கறிஞர்கள் யாரும் வரவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு மேலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, மீண்டும் வரும் டிசம்பரில் நீதிமன்ற விசாரணைக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு ஸ்காட்லாந்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!