இளைஞர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் –தடுப்பூசி பெற்றுக் கொள்வது இளையோரின் பொறுப்பாகுமென நிபுணர்கள் கருத்து

கொரோனா தடுப்பூசியைப் பெறுவது 20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்களின் சமூகப் பொறுப்பு என வைத்தியர் சமிந்த கினிகே தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடுவதில் இளைஞர்கள் குறைந்த அளவிலேயே ஆர்வம் காட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் சமூகத்திற்குள் பெருமளவு நடமாடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏதுவான காரணிகள் அதிகமாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 20 முதல் 30 வயது வரையுள்ள மொத்த இளைஞர்களில் 50 வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி, 1 தசம் 5 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் ஏற்படும் சாத்தியம் பாரிய அளவில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்,

இதேவேளை, 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் இதுவரை கொரோனா காரணமாக 96 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!