விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை இயன்ற அளவு குறைக்கும் வகையில் நிவாரணங்களை வழங்குமாறு பிரதமர் தெரிவிப்பு

தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை இயன்ற அளவு குறைக்கும் வகையில் நிவாரணங்களை வழங்குமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இது தொடர்பான அறிவுறுத்தலை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பில் தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை இயன்ற அளவு குறைக்கும் வகையில் நிவாரணங்களை வழங்குமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்போதைய கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பான தீர்வுகளை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைக்கவுள்ளதாகவும், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!