பிரான்சில் கட்டாயமாக்கப்படும் புதிய நடைமுறை: மீறினால்…?

பிரான்சில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. உலகின், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வயதானோர் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் இரண்டுமே போடப்பட்டுவிட்டதால், தற்போது அதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் படி பிரான்சில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 12 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக (செப்டம்பர் 30-ஆம் திகதி) முதல் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார பாஸ் (pass sanitaire) என்பது கட்டாயமாக்கப்படுகிறது. எனவே, இனி கபேக்கள், உணவகங்கள், திரையரங்குகள், அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கட்டாயமாக pass sanitaire தேவை.
அதே சமயம், பள்ளிகள், வகுப்புகள், கல்வி நிலையங்களுக்குச் செல்ல இந்த pass sanitaire தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. pass sanitaire இல்லை என்றால் அது ஒரு தண்டனைக்குரிய குற்றம் என்று அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
ஏனெனில் தற்போதுள்ள 12-17 வயதுக்குட்பட்டவர்களில் 10 பேரில் 6 பேர் மட்டுமே தங்கள் முதலாவது தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட வயது வரம்புக்குள் 1.4 மில்லியன் பேர் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காரணத்தினால், இன்னும் இது குறித்து எந்த ஒரு தண்டனை அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம் இது தொடர்ந்து நீடித்தால், தடுப்பூசி போடவைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!