பொதுமக்களின் காணிகளில் இராணுவம் பேக்கரி அமைப்பது என்ன நியாயம்? ; வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு; தெற்கில் நடத்த முடியுமா?- ராஜித

வடக்கில் பொதுமக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். தெற்கு மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்தால் அவர்கள் அமைதியாக இருப்பார்களா?

பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் பேக்கரி அமைத்து வியா பாரம் செய்வது சரியா? என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சரு மான ராஜித சேனாரத்ன கேள்வியயழுப்பினார்.

அத்துடன் வழக்கு தொடுக்கப்படாத அரசி யல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவு களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்று கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறி ப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடு கையில்,

கேள்வி:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டன் அரசாங்கத்திற்கு இணக்கப்பாடு எட்டப் பட்டதா? கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதர வளிக்க நிபந்தனை விதிக்கப்பட்டதா?

பதில்:அவ்வாறு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அவர்கள் 2015 ஆம் ஆண்டு முன்வைத்த கோரிக்கையை தற் போது மீண்டும் முன்வைத்துள்ளார்கள்.

அதாவது காணிகள் விடுவிக்கப்பட வேண் டும். அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு கள் துரிதப்படுத்தப்பட வேண்டும். காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பனவே கூட்டமைப்பின் பிர ச்சினையாகும்.

அது நீண்டநாள் பிரச்சினை யாகும். அவை உண்மையில் விரைவுபடு த்தப்பட வேண்டும். அதற்காக நிபந்தனை விதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அது தொடர்பில் பேசவுமில்லை.

கேள்வி:வடக்கில் 650 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளனவா? நம்பிக்கையி ல்லாப் பிரேரணை மீதான எதிர்ப்பின் கார ணமாக இது நடைபெறுகின்றனவா?

பதில்:வடக்கில் 650 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. ஆனால் அவ்வாறு விடு விப்பதில் என்ன தவறிருக்கின்றது. அந்த மக் கள் படும் கஷ்டங்களை நீங்கள் நேரில் சென்று பார்த்தால் அவர்களின் அவலம் உங்களு க்கு தெரியும். உங்கள் காணிகளை யாரா வது இவ்வாறு பறித்தெடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு அப்படி நட ந்தால்தான் புரியும். தம்மிடமிருந்து அபகரி க்கப்பட்ட காணிகளை மீள கோரும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது.

கேள்வி:எனினும் காணி விடுவிப்பானது நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக விரைவுபடுத்தப்பட்டுள்ளதா?

பதில்:நீங்கள் எப்படி அவ்வாறு கூற முடி யும். 650 ஏக்கர் காணிகளுக்கான நில அள வையை இரண்டு வாரங்களுக்குள் செய்ய முடியுமா? அதுமட்டுமன்றி மக்களின் காணி களை இராணுவத்தினர் பேக்கரி அமைத்துக் கொண்டிருப்பது நியாயமானதா? தெற்கில் இவ்வாறு நடந்தால் என்ன செய்வீர்கள்? வட க்கு மக்களின் காணிகள் விரைவாக விடு விக்கப்பட வேண்டும் என்பதை நான் மிக வும் திடமாக வலியுறுத்திக் கூறுகின்றேன்.

அத்துடன் அரசியல் கைதிகளை விடுவி யுங்கள். வழக்குப் போடாமல் இருக்கும் அர சியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் இதனை கூறுவதற்கு நான் பயப்படவில்லை.

அரசியல் கைதிகளுக்கு தண் டனை வழங்கியிருந்தால் கூட இந் நேரம் அவர்கள் வெளியில் வந்திருப்பார்கள். 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்களை கடந்த அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடு தலை செய்தது. அதுவொரு நல்ல செயற்பாடாகும்.

அதேபோன்று இந்த அரசாங்கமும் செயற்பட வேண்டும். மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!