கட்சிக்குள் பிளவுகளா? ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு

தமது கட்சிக்குள் பிளவுகள் இருப்பதாக வெளியான செய்திகளை ஐக்கிய மக்கள் சக்தி மறுத்துள்ளது.
எனினும் சமிந்த விஜேசிறியுடனான பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிட்டதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரியிடம் விளக்கம் கேட்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல, கட்சிக்குள் பிரிவினைகள் பற்றிய செய்திகளை மறுத்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேசிரி மற்றும் ஹர்ஷ விதானகே ஆகிய இருவரும் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் போது அரசாங்க கட்சியில் இணைய இருப்பதாக, சில சமூக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தொடர்பிலேயே தலதா அதுகோரள இந்த பதிலை அளித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்று முன்னாள் பிரதமர் ரணிலை ஆதரிப்பார்கள் என்ற அறிக்கைகள் குறித்து கேட்டபோது, ரணில் விக்ரமசிங்கவுடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தபோதிலும், எவரும் கட்சியில் இருந்து செல்லமாட்டார்கள் என்று தலதா குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!