இலங்கையில் பேருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பேருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்து கொள்வதற்குத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளதுடன், பயணிகள் நெருக்கடியின்றி பயணிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை சில பேருந்துகளில், ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்து போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் இன்று முதல் ஆரம்பிப்பது குறித்த ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!