மகிந்தவின் வாக்குறுதிகள் என்ன ஆனது? சரத் பொன்சேகா கேள்வி

உள்ளூர் வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை அரசாங்கம் முதலீடு என்று அழைத்தாலும், நமது தேசிய வளங்களை விற்பனை செய்வது முதலீடு அல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“பிரதமர் மகிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், நல்லாட்சி அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்த அனைத்து உள்ளூர் வளங்களையும் மீளப் பெறும் என்று கூறினார்.

மகிந்த ராஜபக்ச அந்த நேரத்தில் வெளிநாட்டினருக்கு நாட்டில் உள்ளுர் வளங்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். எனினும் தற்போதைய அரசாங்கம் அதற்கு மாறாக செயற்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்யும் தேசிய வளங்களை தமது அரசாங்கம் மீள பெறும் ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!