இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிப்பு!

இந்திய மீனவர்களது எல்லைதாண்டிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்சியாக எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய- இலங்கை அரசாங்கங்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பாக போராட்டம் நடத்த உள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன துணை தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய வெளிவிவாகார செயலர் வருகைதந்த போது தமிழ் அரசியல் வாதிகள் எவரும் மீனவர் பிரச்சினை தொடர்பில் அவருடன் பேசவில்லை என்றும் தமது பிரச்சினையை பேசுவதற்கு யாரும் இல்லை என்றும், இந்நிலையிலேயே தாம் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்யவுள்ளதாகவும், தமது மீனவர்கள் பல கோடி சொத்துக்களை இதுவரை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!