ஆயிரக்கணக்கான பெண்களை சீரழித்த மன்மதன்: சிக்கியது எப்படி?

சென்னை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 1-ம் தேதி பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், எனக்கு 20210ம் ஆண்டு ஐனவரி மாதத்தில் யோகராஜ் என்ற பூவேந்திரன் யோகா கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக அறிமுகமானார்.

இதையடுத்து, மருத்துவத்துறையில் பணிபுரிந்து வருவதால் யோகா கற்றுக்கொள்ள 14.2.2021-ம் தேதி அவருடைய வகுப்பில் சேர்ந்தேன். அதன் பின்னர், வாட்ஸ் அப் மூலம் முதலில் ஆன்மிக மெசேஜ்களை அனுப்பி வந்தார். பின் என்னை காதலிப்பதாக மெசேஜை அனுப்ப தொடங்கினார்.

அதற்கு நான் மறுப்பு தெரிவிக்க, பிறகு இரட்டை அர்த்த வாரத்தைகளைப் பயன்படுத்தி என்னிடம் பேசினார். அதை அவர் ஆன்மிக ஞானம் என்று கூறினார். பிறகு என்னுடன் சேர்ந்து அவர் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதை நம்முடைய வருங்கால ஞாபக அர்த்தங்கள் என்று கூறுவார்.

கடந்த 28,04,2021 அன்று தனக்கு பிறந்த நாள் என அழைத்தார். அவரின் வீட்டுக்கு சென்ற போது, மெத்தை அலங்கரித்து வைத்திருக்க என்ன என கேட்டதற்கு, இன்ப அதிர்ச்சி என கூறி குளிர் பானத்தில் மயக்கமருந்து கொடுத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதை வீடியோவாக எடுத்து வைத்தும் என்னை மிரட்டி வந்தார். என்னிடம் அடிக்கடி பணம் வாங்கி வந்தார். மேலும், திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியும், இல்லையென்றால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியும் வருகிறார்.

இதனால், பூவேந்திரன் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய தனிப்பட்ட வீடியோவை அழித்து என் மானத்தை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று புகார் அளித்திருக்கிறார்.

இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். இளம்பெண் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையிலும் புகாரின் அடிப்படையிலும் யோகா மாஸ்டர் யோகராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப்பின் அவர் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், இவன் இதுவரை 1000ற்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவனின் செல்போனில் பல வீடியோக்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!