பின்லாந்தில் ஜனாதிபதியான 16 வயது சிறுமி!

பின்லாந்தில் 16 வயது சிறுமி ஒரு நாள் ஜனாதிபதியாக இருந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பிய நாடான பின்லாந்தில், வெறும் 16 வயதே ஆகும் சிறுமியான நெல்லா சால்மினென் (Nella Salminen) கடந்த புதன்கிழமை ஒரு நாளைக்கு மட்டும் ஜனாதிபதியாக பதிவி வகித்துள்ளார்.
இது பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக, உலகெங்கிலும் உள்ள இளம்பெண்கள் ஒரு நாள் அரசியல் அல்லது வியாபாரத்தில் தலைமைப் பொறுப்பேற்கும் #GirlsTakeover பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

பின்லாந்து நாட்டின் ஜனாதிபதி Sauli Niinistö-உடன் இணைந்து பணியாற்ற, தொண்டு நிறுவனமான பிளான் இன்டர்நேஷனலால் (Plan International) நெல்லா சால்மினென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது குறித்து நெல்லா சால்மினென் “இந்த நாள் முழுவதும் நான் நீண்ட காலமாக அனுபவித்த சிறந்த விஷயம் போல் உள்ளது” என்று தலைநகர் ஹெல்சின்கியில் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே இருந்தபடி கூறினார்.

இதேபோல், அக்டோபர் 11 அன்று ஐநாவின் பெண் தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு பதின்ம வயதினர்கள் உகாண்டாவின் கல்வி அமைச்சர், சுவிஸ் கூட்டாட்சி ஆலோசகர் மற்றும் பல முக்கிய இந்தோனேசிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கடமைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

பின்லாந்தின் அரசாங்கம் பிரதம மந்திரி சன்னா மரின் (Sanna Marin) தலைமையிலானது, அவர் 2019-ஆம் ஆண்டு தனது 34 வயதில் ஆட்சியைப் பிடித்தபோது, ​​உலகின் மிக இளையவர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!