“இனி பெண்கள் இவ்வாறான காட்சிகளில் நடிக்கக்கூடாது” – ஈரான் அதிரடி!

டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் பிட்சா சாப்பிடும் போன்ற காட்சிகளில் பங்கேற்க கூடாது என்று ஈரான் அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஈரான் நாடு முழுவதும் இஸ்லாம் வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் தொலைக்காட்சியில் தோன்றும் பெண்களுக்காக புதிய கட்டுப்பாடு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் பெண்கள் சிவப்பு நிறத்திலான எந்த ஒரு உணவையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. பெண்கள் கைகளில் எப்பொழுதும் கையுறைகளை அணிய வேண்டும். அதுபோல ஆண்கள் பெண்களுக்கு தேனீர் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற கூடாது.

பிட்சா, சாண்ட்விச் போன்ற உணவுகளை பெண்கள் சாப்பிடுவது போன்று காட்டி கொள்ள கூடாது. பாலின உறவுகளை தூண்டும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அவ்வாறு கட்டாயம் ஒளிபரப்பு வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒளிபரப்பு அனுமதி பெற வேண்டும்.

இந்த வழிமுறைகளை யாராவது மீறினால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இது குறித்து டிவி சீரியல் தயாரிப்பாளர் பிஜன் பிராங் கூறியது, தற்போதைய சூழலில் டிவி நிகழ்ச்சியை தயாரித்து வெளியிடுவதே பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற கட்டுபாடுகள் பெண்களை ஒடுக்குவது போன்று உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!