அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க கல்வி அமைச்சரின் முயற்சி

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, பிரதமருடனான சந்திப்பொன்றை ஏற்பத்திக் கொடுக்க தாம் தயாராகவுள்ளதாக, கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சின தொடர்பில், தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில், மக்கள் விடுதலை முன்ணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமருடனான சந்திப்பொன்றை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில், தொழிற்சங்களுக்கு சாதகமான தீர்வுகள் கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, அதிபர் ஆசிரியர் தொழிற்சங்களினால் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!