இந்திய வெளிவிவகார செயலாளர் அரசுக்கு கூறியது என்ன! – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் கடந்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வந்து சென்று விட்டார். அவரின் விஜயம் தொடர்பாக பல்வேறு பொய் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் எந்தவித அழுத்தத்தையும் இலங்கை அரசாங்கத்துக்கு பிரயோகிக்கவில்லை. குறிப்பாக 13ஆம் திருத்தம் தொடர்பாகவோ திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாகவோ எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.

அத்துடன் அவரது விஜயம் குறிப்பிட்ட ஒரு விடயத்துக்காக மேற்கொள்ளப்பட்டதொன்று அல்ல. இரண்டு நாடுகளுக்கிடையில் பூரண இணக்கப்பாடுகள் இருக்கின்றன. அவரின் விஜயத்தின் அடிப்படையாக இருந்தது பெளத்த தர்மமாகும். எமது கலாசாரம், பொருளாதாரம் என பல விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருத்திருந்தன.

அவ்வாறு இல்லாமல் இந்திய வெளிவிவகார செயலாளரின் விஜயம் எமது ஏதாவது வேலைத்திடம் அல்லது வேறு ஏதாவது விடயத்துக்கு எமக்கு அழுத்தம் பிரயோகிக்க வரவில்லை என்பதை நான் உறுதியாக தெரிவிக்கின்றேன் என்றார்.

அத்தடன் கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு இது வரை எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என்று கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!