கொள்ளையிடவே வந்தார் இந்தியத் தளபதி!

பிராந்தியத்தில் உள்ள பெறுமதிக்க சொத்துக்களை கொள்ளையிடுவதற்கே இந்திய இராணுவ பிரதானி இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, யுத்தக் காலத்தில்கூட இவர் இலங்கைக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

“தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கடந்த அரசாங்கம் வழங்கிய நாட்டின் சொத்துக்களை மீட்பதாகவும், நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யப்போவதில்லை எனவும் அரசாங்கம் கூறியது எனவும் தெரிவித்தார்.

எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாட்டுக்கு மிகவும் பெறுமதிவாய்ந்த சொத்துக்கள் நாட்டின் பொருளாதாரத்துக்காக பலிகொடுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போட்டித்தன்மைக்கு இலங்கை இலக்கு வைக்கப்படுகிறது. இந்திய இராணுவ பிரதானி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். உலகின் பலமிக்க இராணுவத்தின் பிரதானியாக அவர் இருக்கிறார்கள். யுத்தக் காலத்தில் கூட இவர்கள் இலங்கைக்கு வந்தது கிடையாது எனவும் தெரிவித்தார்.

பிராந்திய யுத்த பலத்தை பலப்படுத்தவே இந்திய இராணுவ பிரதானி நாட்டுக்கு வந்துள்ளார். பிராந்தியத்தில் உள்ள பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிடுவதற்காகே அவர் இங்கு வந்துள்ளார் எனவும் அவர் இதன்போது கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!