லண்டனில் சிறுவனின் பிழையால் நேர்ந்த விபரீதம்: நூலிழையில் உயிர்தப்பிய தாய்!

லண்டனில் நள்ளிரவில் 20 மாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு லண்டனில், Battersea பகுதியில் Westbridge பிரிட்ஜ் சாலையில் உள்ள 20 மாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
சில நிமிடங்களில் விடு முழுக்க தீ பரவிய நிலையில், லண்டன் தீயணைப்புப் படை சம்பவ இடத்துக்கு இ விரைந்துவந்து தீயை சில மணிநேரங்கள் போராடி அணைத்தது.

அப்போது அந்த வீட்டில் இருந்த அட்ரின் பெஹசாடி (Atrin Behazadi) எனும் 13 வயது சிறுவன் மற்றும் அவனது தாய்க்கு தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சிறுவன் அட்ரினுக்கு கைகள் மற்றும் வயிறு பகுதிகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது, அவனது தாய்க்கு லேசான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், இருவரது உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 70 தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், இந்த விபத்துக்கு சிறுவன் அட்ரின் தான காரணம் என தெரியவந்தது.

அட்ரின் தனது படுக்கை அறையில் ஒரு டியோடரன்ட் பாடி ஸ்ப்ரேவை பயன்படுத்தியுள்ளான். அப்போது, அந்த ஸ்ப்ரே அருகில் எரிந்துகொண்டிருந்த ஒரு டீ லைட் மெழுகுவர்த்தியின் மீது நேரடியாக தெளித்துள்ளது.

அதன் காரணமாக தீப்பிழப்பு ஏற்பட்டு, அந்த வாசனை திரவிய கேனை வெடிக்கச்செய்துள்ளது. இதில், உடனடியாக அட்ரினுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது, பின்னர் தியானது மளமளவென துணிகளின் பற்றி விடு முழுக்க பரவியது.

டியோடரன்ட் பாடி ஸ்ப்ரேவை எரியும் மெழுகுவர்த்தியில் தெளித்து சிறுவன் செய்த சிறு தவறு வீட்டையே சாம்பலாக்கியுள்ளது. இதனையடுத்து, இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க லண்டன் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!