அடையாளம் காணப்படாத தொற்றாளர்களால் ஆபத்து!

சமூகத்தில் அடையாளம் காணப்படாத அதிகளவான கொரோனா நோயாளிகள் இருக்கக்கூடும் என்பதால், நாட்டில் மேலும் எழுமாறான பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமானது என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் செயலாளர் டொக்டர் கமல் ஏ பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

இந்த கண்டறியப்படாத நோயாளிகள் அறிகுறியற்றவர்கள் என்றும், அதனால் அவர்கள் சிகிச்சைக்காகவோ அல்லது பரிசோதனைக்காகவோ செல்வதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அறிகுறிகளைக் காட்டாத சமுதாயத்தில் கண்டறியப்படாத நோயாளிகள் இருப்பதால், தினசரி கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அறிக்கையிடப்படுவதை விட அதிகமாக உள்ளது என்பது தெளிவாகிறது,” என்று அவர் வாதிட்டார்.

“எனவே, இதுபோன்ற நோயாளிகளைக் கண்டறியும் வகையில் மேலும் எழுமாறான பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம்,” என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சுகாதார விதிகளைப் பின்பற்றத் தவறும் அளவுக்கு மக்கள் அலட்சியமாக உள்ளனர் என்றும் வருத்தம் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!