
இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் வழக்கை விசாரித்த Sabah-வில் இருக்கும் Tawau உயர்நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மலேசியாவை பொறுத்தவரை போதைப் பொருள் பயன்படுத்துவது பெரும் குற்றம் ஆகும். இங்கு சட்டங்கள் கடுமையாக இருக்கும். சுமார் 50 கிராமுக்கு மேல் போதை பொருள் வைத்திருப்பது அல்லது விநியோக செய்வது போன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால், அது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை உறுதியாகிவிடும்.
அந்த வகையில், தற்போது 55 வயதாகும் Hairun Jalmani போதை பொருள்(113 கிராம்) வைத்திருத்தல் மற்றும் விநியோகம் செய்த குற்றத்திற்காக அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்த போது, அவர் உயிர் பிச்சை கேட்டு கதறி அழுகிறார்.
இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளதால், மலேசியாவில் இருக்கும் மக்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள பல்வேறு தரப்பினரும், அவரை மன்னித்து விடலாம், அவருடைய குழந்தைகளை யார் பார்ப்பார்கள் என்ற அனுதாபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், மலேசியாவில் மரணதண்டனை என்பது ஏழைகளுக்கே கொடுக்கப்படுகிறது, அதற்கு இது ஒரு உதாரணம் என்று Amnesty International Malaysia தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கபப்ட்ட அனைத்து பெண்களிலும் 95 சதவீதம் பேர் போதை பொருள் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!