சிரியாவில் காட்டுத்தீக்கு காரணமான 24 பேருக்கு தூக்கு!

சிரியாவில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த ஆண்டு காட்டுத்தீ பரவியது. இந்த காட்டுத்தீ 3 மாகாணங்களுக்கு பரவியது. பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 187 காட்டுத்தீ சம்பவத்தில் 280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

    
காட்டுத்தீயால் 32 ஆயிரம் ஏக்கர் காட்டில் உள்ள விவசாய நிலம் அழிந்தது. மேலும் 370 வீடுகள் தீக்கிரையானது. இந்த காட்டுத்தீயால் 3 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், இந்த காட்டுத்தீ திட்டமிட்டு நடத்தப்பட்டது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காட்டுத்தீயை வேண்டுமென்றே தொடங்கிய 24 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 24 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், காட்டுத்தீயை வேண்டுமென்றே தொடங்கிய வழக்கில் 24 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 24 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிரியா நீதித்துறை நேற்று தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!