சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட ஊக்குவிப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை

ஐந்து நாடுகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக குறுங்கால திட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார்.

இதற்கமைய பிரித்தானியா, இந்தியா, ஜேர்மனி, ரஸ்யா, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஐந்து நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட ஊக்குவிப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!