தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக சார்ள்ஸ்..!

சுந்தரம் அருமைநாயகமை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், பி.எஸ்.எம்.சார்ள்ஸை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் நியமிப்பதற்கு நாடாளுமன்றப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

வி.சிவஞானசோதியின் மறைவையடுத்து பொதுச் சேவைகள்
ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.

மேலும் குறித்த  வெற்றிடத்துக்கு சுந்தரம் அருமைநாயகத்தை  நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்தபரிந்துரைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில்
கூடிய நாடாளுமன்ற பேரவை இணக்கப்பாட்டை வழங்கியிள்ளது.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சுந்தரம் அருமைநாயகம் இதற்கு முன்னர் வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் ராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் வடமாகாண ஆளுநராகக் கடமையாற்றியிருந்தார்.

மேலும் இவர் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும், சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் அவர் கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்க்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!