சீனத் தூதுவரை தேடிச் சென்றது பெரும் அவமானம்!

இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் அழுத்தங்களை அடுத்தே, தகுதியற்றதாகக் கண்டறியப்பட்ட சேதன உரங்களை மீள் பரிசோதனைக்கு உட்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் அழைத்தவுடனேயே விவசாய அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் அவரைச் சந்திக்கச் சென்றமை இலங்கைக்கு பெரும் அவமானம் என்றும் குறிப்பிட்டார்.

விவசாயத் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளாலும் இந்த உர மாதிரிகள் தொடர்பில் மூன்று பரிசோதனைகள் நடத்தப்பட்டு, குறித்த மாதிரியில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா இருப்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பின்னரும் சர்வதேச பரிசோதனையை மேற்கொண்டு கப்பலிலுள்ள உரத் தொகுதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சீன தூதுவரை சந்தித்த பின்னர் தெரிவிப்பது சீன தூதுவராலயத்தின் ஆதிக்கத்துக்கு கீழ் இருப்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!