சீனதூதரகத்தின் தீர்மானத்திற்கு இலங்கை மக்கள் வங்கி பதில்

இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் கருப்பு பட்டியலில் மக்கள் வங்கி இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இரு தரப்பினருக்கிடையிலான ஒப்பந்தங்களின் பிரகாரம் பணம் செலுத்த தவறியமை காரணமாக குறித்த வங்கி கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகத்தினை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் சீன வர்த்தக அமைச்சிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையுடனான சர்வதேச வர்த்தக விவகாரத்தில் அனைத்து சீன நிறுவனங்களும் கட்டுப்பாட்டை கடுமையாக்க வேண்டும் என்பதுடன் மக்கள் வங்கியூடாக வழங்கப்பட்ட கடன்தொடர்பான கடிதங்கள் ஏற்றுக்கொள்வதனை தவிர்க்குமாறு தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
ஒப்பந்த விதிமுறை மற்றும் வர்த்தக விதிமுறை மற்றும் சர்வதேச விதிமுறைகளை மீறி குறித்த வங்கி செயற்பட்டதனால் சீன நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையில் உள்ள சீன தூதரகத்தினை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி பதிலளித்துள்ளது.

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கும் சீன தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையிலான உடன்படிக்கையினை மீறி, நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாமை காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!