அமைச்சர் மகிந்தானந்தவை கடுமையாக சாடிய பிரதமர்

பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை (Mahindananda Aluthgamage) கடுமையாகச் சாடியுள்ளதாகத் தெரியவருகிறது.

கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கடந்த வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்த விடயம் தொடர்பாகப் பிரதமர், அமைச்சரைச் சாடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்துள்ள சேதனப் பசளையை ஏற்க போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச, சீனத் தூதுவருக்கு அறிவித்துள்ளதாக, அமைச்சர் மகிந்தானந்த கூறியிருந்தமைக்கு பிரதமர் இவ்வாறு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தனக்கும், சீனத் தூதுவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அப்படியான எந்த விடயமும் பேசப்படவில்லை எனப் பிரதமர் கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் சீனா, இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் சம்பந்தமாகவே பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பசளை தொடர்பான விடயத்தை ஆராய்ந்து மீண்டும் பேசுவதாக பிரதமர், சீனத் தூதுவரிடம் குறிப்பிட்டுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!